மாநில அளவிலான இளையோர் தடகளத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேலம், செப்.21: மாநில அளவிலான இளையோர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட தடகள சங்க செயலாளர் முத்துக்குமார் விடுத்துள்ள அறிக்ைக: தமிழ்நாடு மாநில அளவிலான, 32வது இளையோர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை ேதனி வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் 14 வயது முதல் 20 வயது வரை 4 பிரிவாக நடக்கிறது. இப்போட்டியில் தேர்வு செய்யப்படுவோர், ராஞ்சியில் நடக்கும் 34வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள், சேலம் என்ஜிஜிஓ., பில்டிங், கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் பதிவு செய்யலாம்.

வரும் 23ம் தேதி மாலை வரை பதிவு செய்ய கடைசி நாளாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
Advertising
Advertising

Related Stories: