லாரி மோதி வாலிபர் பலி

சங்ககிரி, செப்.21: சங்ககிரி அருகே டாரஸ் லாரி மோதியதில், ஆட்டோ மொபைல்ஸ் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.  ஆட்டையாம்பட்டி பழக்கார வீதி காட்டைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (29). சங்ககிரியில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல்ஸ் கடையில் வேலை செய்தார். நேற்று காலை டூவீலரில் சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். பட்டறைமேடு என்ற இடத்தில் வரும் போது பின்னால் வந்த டாரஸ் லாரி ரத்தினவேல் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரி பின் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

Related Stories: