சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெல் தொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகளாக உள்ள ஊதிய மாற்று பேச்சுவார்த்தையை 5 ஆண்டாக மாற்ற வேண்டி பெல் சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மெயின்கேட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர் அருணன், புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத், துணைத்தலை வர்கள் முருகேசன், குமரேசன் உட்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதிகாரிகளுக்கும், சூபர்வைசர்களுக்கும் அமல்படுத்திய ஊதிய மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதியமாற்றம் பேசி முடித்தபின் அதிகாரிகளுக்கு அமல் படுத்த வேண்டும். கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சட்ட கூலியை அமல்படுத்த வேண்டும். இடைக்கால நிவாரணம் என்ற பெயரில் ஊதியமாற்ற பேச்சுவார் த்தையை தாமதப்படுத்த கூடாது. புதிய ஊதிய மாற்றத்தை 2017 ஜனவரி முதல் தேதியிலே யே செய்யாத பெல் நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: