×

முத்தம்பட்டி நெசவாளர் காலனி மக்கள் குடிநீருக்கு 3 கிமீ அலையும் அவலம்

தா.பேட்டை,செப்.21: தா.பேட்டை அருகே முத்தம்பட்டி நெசவாளர் காலனியில் வசிக்கும் மக்கள் 3 கிமீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதால் தட்டுப்பாட்டை போக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.தா.பேட்டை ஒன்றியத்தில் முத்தம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. அங்குள்ள நெசவாளர் காலனியில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய குடிநீர் இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருவதால் இதுகுறித்து திருச்சி கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், நெசவாளர் காலனி பகுதியில் ஆறு இடங்களில் போர்வெல் அமைத்தும், குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர்வெல்லில் தண்ணீர் இல்லாததால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் மற்றும் வீட்டு தேவைக்கு தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்டோர் பெரிதும் சிரமமடைகின்றனர். இதுதவிர தெருக்களில் போதிய அளவு மின்வசதி ஏற்படுத்தப்படவில்லை. பெரும்பாலான மின்கம்பங்களில் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சமாக உள்ளது. எனவே முத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நெசவாளர் காலனியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி போதிய மின்விளக்கு வசதி செய்து தர வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை