×

இளைஞர் மன்றங்கள் விளையாட்டு போட்டி

சாயல்குடி, செப். 21: சாயல்குடி அருகே கீழச்செல்வனூரில் அரசு பதிவெண் பெற்ற இளைஞர் மன்றங்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இந்திய அரசு இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அரசு பதிவெண் பெற்ற இளைஞர்சங்க கிராமப்புற இளைஞர்களுக்கான கபடி, வாலிபால் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள், தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடந்தது. சாயல்குடி அருகே கீழச்செல்வனூரில் ராமநாதபுரம் நேருயுவகேந்திரா, சாத்தங்குடி நேதாஜி நற்பணி மன்றம் இணைந்து போட்டிகளை நடத்தியது. போட்டிகளுக்கு நேருயுவகேந்திரா இயக்குனர் சடாச்சரவேல் தலைமை வகித்தார். கீழச்செல்வனூர் எஸ்.ஐ சாரதா, கடலாடி வட்டார புள்ளியல் ஆய்வாளர் ராமபூபதி முன்னிலை வகித்தனர்.

போட்டிகளை கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன் துவக்கி வைத்தார், மேலக்கிடாரம் அக்னிசிறகு இளைஞர் மன்ற தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். 10 அணிகள் கலந்து கொண்ட கபடி போட்டியில் சாத்தங்குடி நேதாஜி மன்றம் அணியினர் முதலிடத்தையும், மேலக்கிடாரம் அக்னி சிறகுகள் மன்ற அணியினர் இரண்டாமிடத்தையும் பெற்றனர், வாலிபால் போட்டியில் கீழச்செல்வனூர் இளைஞர் மன்ற அணி முதலிடத்தையும், காவாகுளம் விவேகானந்த இளைஞர் மன்ற அணி இரண்டாமிடத்தையும் பெற்றது. ஓட்டப்போட்டி, குண்டு எரிதல், உயரம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளும் நடந்தது. வெற்றி பெற்ற அணி, வீரர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை