×

அடைத்தே கிடக்கும் நூலகம் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

பரமக்குடி, செப். 21: மேலக்காவனூரில் உள்ள நூலகம் அடைத்தே கிடக்கிறது. இதை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் மாணவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழக அரசு கிராமங்கள் தோறும் நூலகம் அமைத்துள்ளது.   அறிவை பெருக்கும் பல்வேறு புத்தகங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. நிரந்தர பணியாளர் அமர்த்தப்படாமல் சம்மந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவத்தினர், முதியவர்கள் போன்றோர் பணியில் அமர்த்தி அவர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் அளித்து வருகிறது.

இருப்பினும் பல ஊராட்சிகளில் நூலகங்கள் முறையாக திறக்கப்படுவது கிடையாது. பரமக்குடி அருகே மேலக்காவனூரில்  உள்ள நூலகம் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் அடைத்தே கிடக்கிறது.  இதனால் நூலகத்திற்கு மாணவர்கள், கிராம மக்கள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலர் சைக்கிள் நிறுத்தும் இடமாக பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.  ஊராட்சி  நிர்வாகத்தினர் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பள்ளி மாணவி உமா கூறுகையில், ‘தற்போது நாங்கள்  பொதுஅறிவு வேண்டி செய்திதாள்களை படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால் அதிகளவில் நூலகத்திற்கு வர வேண்டியுள்ளது. எந்நேரமும் நூலகம் அடைத்தே கிடப்பதால் நாளுக்கு நாள் நாங்கள் நூலகத்திற்கு செல்வது குறைந்து வருகிறது.  எங்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நூலகத்தை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை