×

வேளாண்மை வளர்ச்சி நெல் திட்டத்தின் கீழ் மானியம் உதவி இயக்குநர் தகவல்

பரமக்குடி, செப். 21: இயந்திர விதைப்புக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என நயினார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயந்திமாலா தெரிவித்துள்ளார். பரமக்குடி தாலுகா நயினார்கோவில் வட்டாரத்தில் பருவமழை சாதகமாக தொடர்ந்து பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் நெல் விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. நெல் நேரடி விதைப்புக்கு பதிலாக இயந்திரம் மூலம் வரிசை விதைப்பு செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இயந்திர விதைப்பு செய்வதன் மூலம் குறைந்த விதை தேவை, சரியான பயிர் இடைவெளி மற்றும் கூடுதல் மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் இயந்திர விதைப்புக்கு முக்கியத்துவம் காட்டி வருகின்றனர். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க அரிசி திட்டத்தின் கீழ் நெல் இயந்திர விதைப்பு தொகுப்பு செயல் விளக்கம் சுமார் 250 ஏக்கர் தேர்ந்தடுக்கப்பட்டு விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தாளையடிகோட்டை, நெடுங்குறிச்சி, அக்கிரமேசி ஆகிய ஊர்களில் வரிசை விதைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இயந்திர நெல் விதைப்புக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் (நெல்) கீழ் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை