மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மதுரை, செப்.21: கடந்த 25 ஆண்டாக குழாய் மூலம் குடிநீர் வழங்காததால் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மதுரை மாநகராட்சியில் 55, 56வது வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2011ம் ஆண்டில் மாநகராட்சியோடு இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட பின்னரும் அவலம் தொடர்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாக்டர் அம்பேத்கார் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். இவர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், பகுதி செயலாளர் லெனின் உள்ளிட்ட பலர் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மைய அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்தத்தடை இருந்து வருகிறது. இத்தடையை மீறி நேற்று முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: