உசிலை மண்டபங்களில் பட்டாசு வெடிக்க தடை

உசிலம்பட்டி, செப்.21: உசிலம்பட்டியில் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில், எஸ்.ஐ.ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் 34 திருமண மண்டப உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இன்ஸ்பெக்டர் மாடசாமி கூறுகையில், ‘‘மண்டபத்தில் முன்பதிவு செய்ய வரும் இல்லவிழா நடத்துபவர்களிடம் காவல்துறையிடம் அனுமதி பெற்று வரச்சொல்லுங்கள். நீங்கள் அவர்களிடம் இப்பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அனுமதியின்றி பிளக்ஸ் வைக்கக் கூடாது என்பதனை முன்கூட்டியே கூறிவிடுங்கள். பொதுமக்களின் நலனிற்காகவும், பட்டாசு வெடிப்பதால் அருகிலுள்ள பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் நடந்துசெல்வோர், குழந்தைகள், டூவீலர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மீது பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டு விடுகிறது. பிளக்ஸ் வைக்கும்போது சாலையின் இருபுறங்களிலும் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: