×

பாதையை ஆக்கிரமித்த தாசில்தார் டிரைவர் சுடுகாட்டில் குடியேறிய கிராமமக்கள் மேலூர் அருகே பரபரப்பு

திருப்பரங்குன்றம், செப்.21: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்  பக்தர்களின் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷீமா பானு, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி சத்தியமூர்த்தி ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.

கோவிலில்  அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், கட்டண விபரங்கள், பிரசாதம், அன்னதானக்கூடம், கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் வரவு, செலவு தணிக்கை  குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்களை சந்தித்து  வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். ஆய்வின் போது கோயில் துணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட கோயில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்