மாணவர்கள் மீது தாக்குதல்

மேலூர், செப்.21: முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவர்களை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலூர் அருகே உள்ள பட்டூரை சேர்ந்த சிவன்ராசு, ஆதாலிசின்னன் ஆகியோர் மேலவளவு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர். இவர்கள் தினசரி பள்ளிக்கு செல்லும் டவுன் பஸ்சில் வரும்போது அதே பகுதியை சேர்ந்த சிலருடன் மோதல் இருந்து வந்துள்ளது.   நேற்று மாணவர்கள் இருவரையும் மற்றொரு தரப்பை சேர்ந்த அழகுராஜா, கார்த்தி, தீபன் ஆகியோர் தாக்கி காயப்படுத்தினர். இவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மேலவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: