×

டிராவல்ஸ் அதிபர் தற்கொலை

மேலூர், செப்.21: மேலூர் அருகே எட்டிமங்கலம் ஊராட்சியில் உள்ளது சுந்தரராஜபுரம். இப்பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு தனியாக சுடுகாடு உள்ளது. இதே பகுதியை சேர்ந்த  தென்னரசு என்பவர், இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து விவசாய பணிகளை செய்து வருகிறார். இவர் மேலூர் தாசில்தாரின் ஜீப் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.    இந்த ஆக்கிரமிப்பால் தாங்கள் சுடுகாட்டிற்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் கலெக்டரிடம் பலமுறை கிராமமக்கள் புகார் கூறிவிட்டனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர்.

விரக்தியடைந்த மக்கள் நேற்று தங்கள் குழந்தைகளுடன் சுடுகாட்டில் குடியேறி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேலவளவு போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஆர்டிஒ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அந்த இடத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றும் அதேபோல் வேறு யாரும் பயன்படுத்தவும் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சுடுகாட்டில் கிராம மக்கள் குடியேறிய சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே நேற்று இரவு 20 பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் திடீரென சுடுகாட்டில் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கினர். மேலவளவு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்தது.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...