×

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி

திண்டுக்கல், செப். 21: சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்தத் தொகையான ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப உணவூட்டும் மானியம் ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய மருத்துவக்காப்பீட்டு திட்டத்திற்கு மாதம் ரூ.180 பிடித்தம் செய்வது கூடுதலாக உள்ளது. இதை குறைப்பதோடு திட்டத்தில் பணிபுரியும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு பேரணி மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடைபெற்றது.

அதன்படி திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் யூனியன் அலுவலகத்தில் இருந்து சப்கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். பேரணிக்கு மாவட்டத் தலைவர் ராமு தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் கோரிக்கைகளை பற்றி விளக்கி உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார். இதில் அனைத்து பள்ளி சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்