60 வயது பெண்ணுக்குமூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

சென்னை: சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையில் புறநோயாளியாக வந்த லீலா சங்கர் (60) என்பவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சிகிச்சை நடந்த நாளிலேயே அவர் வீட்டுக்கு நடந்து சென்றார். இதுகுறித்து, பார்வதி மருத்துவமனையின் தலைவரும், எலும்பியல் மருத்துவப் பிரிவின் தலைவருமான டாக்டர் எஸ்.முத்துகுமார் கூறியதாவது: புறநோயாளிகளுக்கான எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பு ஆகும். ஆசியாவிலேயே முதல் அறுவை சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்திருப்பதை எண்ணி மிகவும் பெருமிதம் கொள்கிறோம் என்றார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட லீலா சங்கர் கூறியதாவது: ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வலி இல்லாமல் நடக்க தொடங்கினேன். அறுவை சிகிச்சைக்கு பின் அடிக்கடி மருத்துவமனைக்கு வராமலேயே விரைவில் நிவாரணம் பெற்றுள்ளேன். இந்த மாதத்தில் நடைபெற உள்ள வாக்கதான் எனப்படும் நடை பேரணிக்கு தயாராகி விட்டேன் என்றார்.

Related Stories: