கும்பகோணம் வேளாண் அலுவலகத்தில் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்குவதில் குளறுபடி

கும்பகோணம், செப். 21:  கும்பகோணம் வேளாண் அலுவலகத்தில் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளது. எனவே விரைந்து விசாரித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கும்பகோணம் சார் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கும்பகோணம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கீழக்கொருக்கை, மேலகொருக்கை, உடையாளூர், தில்லையம்பூர், திப்பிராஜபுரம், மருதாநல்லூர், கருவளஞ்சேரி, தேனாம்படுகை, சோழன்மாளிகை, ஆண்டித்தோப்பு கிராமங்களில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 2016-2017ம் ஆண்டு சம்பா, தாளடி பயிருக்கான பயிர் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.375 செலுத்தினர். ஆனால் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் செலுத்தப்பட்ட காப்பீட்டுக்கு உரிய இழப்பீடு, வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை.

இதுகுறித்து அலுவலகத்தில் கேட்டபோது, வங்கியில் அனைத்து தொகையையும் செலுத்தப்பட்டுவிட்டது, விரைவில் காப்பீட்டுதொகை வந்து விடும் என்று கூறுகின்றனர்.  இந்நிலையில் எங்களது சாகுபடி செய்த நிலத்துக்கும், செலுத்திய காப்பீட்டு தொகைக்கும் பட்டியலில் சரியாக உள்ளது. ஆனால் பயிர் காப்பீட்டு செலுத்திய தொகைக்கும், சாகுபடி செய்த நிலத்தை ஒரு சிலருக்கு குறைத்தும், ஒரு சிலருக்கு கூடுதலாக வங்கியில் தொகையை செலுத்தியுள்ளனர்.இதேபோல் பழவத்தான்கட்டளையில் உள்ள 3 பேருக்கு தலா அரை ஏக்கர் நிலத்துக்குரிய காப்பீட்டுத்தொகையை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தலா 9 ஏக்கர் என பட்டியல் போட்டு தொகையை வங்கியில் செலுத்தியுள்ளனர். இதேபோல் கொற்கை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு 11ஏக்கர் சாகுபடி நிலத்துக்கு பயிர் காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு 6 ஏக்கர் என பட்டியலில் போட்டு தொகையை வங்கியில் செலுத்தியுள்ளனர்.

இதனால் விவசாயிகளின் காப்பீட்டு தொகையில் நடந்துள்ள குளறுபடி, முறைகேடு குறித்து  ஆய்வு செய்ய வேண்டும். இதுபோல் விவசாயிகளின் காப்பீட்டு தொகையில் நம்பிக்கை மோசடி செய்த வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராம விவசாயிகளை திரட்டி அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கைவிவசாயிகளின் காப்பீட்டு தொகையில் நம்பிக்கை மோசடி செய்த வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: