அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்க வலியுறுத்தி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் ஏஐடியூசி விழிப்புணர்வு பிரசாரம்

தஞ்சை, செப். 21:  அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட், ஏஐடியூசி சார்பில் பிரசார இயக்கம், தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் மதுக்கூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், பேராவூரணி, ஊரணிபுரம், ஒரத்தநாடு வந்த இக்குழுவினர் நேற்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் தலைமையில் வந்த குழுவினரை இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மத்திய அரசின் மக்கள் விரோதபோக்குக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பிரசார இயக்கத்தினர் பாபநாசம், திருவையாறு ஆகிய வழியாக புறப்பட்டு சென்றனர்.

பாபநாசம்:   பண்டாரவாடையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏஐடியூசி கொடியை மாநில  செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஏற்றினார். ஏஐடியூசி மாநில செயலாளர்  சந்திரகுமார், திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், பாபநாசம்  ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, கும்பகோணம் நகர செயலாளர் மதியழகன், ஏஐடியூசி  மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்டக்குழு தர்மராஜ், மாவட்ட விவசாய  தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் குணசேகரன், நவநீதகிருஷ்ணன்  பங்கேற்றனர்.  இதேபோல் பாபநாசத்திலும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர்  பாரதி, கட்டுமான தொழிலாளர் சங்க சுகுமாறன் பங்கேற்றனர்.  பாபநாசம்  அடுத்த பண்டாரவாடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வந்த பிரசார பயண  குழுவில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி  முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார்  பங்கேற்றனர்.

Related Stories: