×

கறம்பக்குடி மைலன்கோன்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கறம்பக்குடி, செப். 21: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மைலன்கோன்பட்டி ஊராட்சியில் கால் கடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கறம்பக்குடி கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆவின் மருத்துவர் ரெங்கராஜ்,  கால்நடை பராமரிப்பு உதவியாளர் தங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர். மேலும் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மானவிகள் பிரியங்கா, சங்கீதா, சிந்துஜா, சவுமியா,  விண்ணரசி ஆகியோர் கிராமப்புற அனுபவ திட்டத்தின் கீழ் பொது மக்களிடம் கால்நடைகளுக்கு ஏற்படும்  கோமாரி நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கோமாரி நோய் தடுப்பு முகாமிலும் கலந்து கொண்டு பணியாற்றினர். இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா