×

புதுகை பழனியப்பா கார்னரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாதர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியல் எபட்டுக்கோட்டை - காரைக்குடி அகல பாதையில் டெமு ரயில் மீண்டும் இயக்கம்

அறந்தாங்கி, செப். 21:  தினகரன் செய்தி எதிரொலியாக பட்டுக்கோட்டை - காரைக்குடி அகலப் பாதையில் டெமு ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே ரூ.300 கோடி மதிப்பீட்டில் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டது. அகலப் பாதை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் டெமு ரயில் இயக்கப்பட்டது. இந்த தடத்தில் உள்ள 32 லெவல் கிராசிங்குகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் ரயில் ஓட்டுனரே லெவல் கிராசிங்குகளில் ரயில்வே கேட்டுகளை மூடி திறக்க வேண்டி இருந்தது. இதனால் பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே பயண நேரம் சுமார் 3.30 மணி நேரமாக உள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் பல மடங்கு குறைவாக இருந்த போதிலும் பயண நேரம் அதிகமாக இருந்ததால் பயணிகள் டெமு ரயிலில் பயணம் செய்ய விரும்பவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம்  டெமு ரயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை என காரணம் காட்டி கடந்த மாதம் ரயில் சேவையை நிறுத்தியது.

இது குறித்து கடந்த ஞாயிற்றுக் கிழமை தினகரனில் விரிவான செய்தி வெளியானது. தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே 32 ரயில்வே கிராசிங்குகளில் பாதிக்கும் மேற்பட்ட லெவல் கிராசிங்குகளில் தற்காலிகமாக வெளியூர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள்  கேட்டுகளை திறந்து மூடுவதற்காக பணியமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து காரைக்குடியில்  இருந்து புறப்பட்ட டெமு ரயில் காலை 11 மணிக்கு அறந்தாங்கி ரயில் நிலையம் வந்தது. பின்னர் ரயில் பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயிலிலும்  சில பயணிகளே பயணம் செய்தனர். இதன் மூலம் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை எனக் கூறி ரயில் சேவையை ரத்து செய்யாமல்  தினமும் காலை வேளையில் ரயில்களை அதிக வேகத்தில் இயக்கினால் பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்த ஆர்வம் காட்டுவர். எனவே மக்களின் வரிப்பணம் வீணாகாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா