×

கரூரில் 26,27ம் தேதிகளில் ஆட்சி மொழி பயிலரங்கம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் தகவல்

கரூர்,செப்.21:தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்புசெழியன் விடுத்துள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்வளர்ச்சித்துறையால் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடத்தப்பட்டு ஆட்சிமொழி திட்டச் செயலாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆட்சிமொழி திட்டத்தை மேலும் முனைப்புடன் செயல்படுத்திட செப்டம்பர் 26ம்தேதி முதல் 27ம்தேதி வரை இரண்டு நாட்கள் கரூர் மாவட்டத்தில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெறுகிறது. 26ம்தேதி நடைபெறும் பயிலரங்கத்தை டிஆர்ஓ சூர்யபிரகாஷ் தொடங்கி வைக்கிறார். 27ம்தேதி நடைபெறும் கருத்தரங்கினை கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார்.
இந்த கருத்தரங்களில் தமிழ்வளர்ச்சி இயக்குநர் சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்துக்கு கேடயம் வழங்கவுள்ளார்.விழா ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரமங்கலத்தில்
விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம்
குளித்தலை, செப்.21: குளித்தலை வட்டார வேளாண்மைத் துறையில், ஆத்மா திட்டத்தின் சார்பில் குமாரமங்கலத்தில் விவசாயிகள் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் பாண்டி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் சீலாரோஸ்லின் வேளாண் வணிகம் பற்றி விளக்கமளித்தார். புழுதேரி தொழில் நுட்ப வல்லுநர் திருமுருகன் நெல்வரிசை நடவு பற்றியும், கால்நடைத்துறை அலுவலர் உமையாள், தோட்டக்கலைத்துறை அலுவலர் நாகராஜன், வேளாண் உதவி செயற்பொறியாளர் அசோகன் கலந்து கொண்டு தங்கள் துறை திட்டங்கள் பற்றியும், புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும் விரிவாக பேசினர்.  நிகழ்ச்சி ஏற்பாட்டினை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் செல்வேந்திரன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...