×

அப்புறப்படுத்த கோரிக்கை க.பரமத்தி அருகே பாலமலை முருகன் கோயிலில் 23ம்தேதி திருப்புகழ் திருப்படி விழா

க.பரமத்தி, செப்.21: க.பரமத்தி அருகே பாலமலை முருகன் கோயிலில் 23ம்தேதி திருப்புகழ் திருப்படி விழா நடைபெறுகிறது.க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பாலசுப்பிரமணி கோயிலில் 23ம்தேதி (ஞாயிறு) காலை 7.30 முதல் மதியம் 1மணி வரை 20ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து பக்தர்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வருதல்.பின்பு விநாயகர் வழிபாட்டு திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி அனைத்து படிகளுக்கும் தலைவாழை இலை வைத்து அதன்மேல் பச்சரிசி, தேங்காய், பழம் வைத்து மலர்களை தூவி தீபம் ஏற்றி வைத்து திருப்புகழ் பாடி ஒவ்வொரு படியாக பூஜைகள் நடத்தப்பட்டு கோயிலில் உள்ள 55 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெறுகிறது.
திருப்புகழை குமாரசாமி நாத தேசிகர் குழுவினரும், கரூர் மேலைபழனியப்பன் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட உள்ளது.பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை திருப்புகழ் திருப்படி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். க.பரமத்தி, செப்.21: க.பரமத்தி அருகே பாலமலை முருகன் கோயிலில் 23ம்தேதி திருப்புகழ் திருப்படி விழா நடைபெறுகிறது.

க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பாலசுப்பிரமணி கோயிலில் 23ம்தேதி (ஞாயிறு) காலை 7.30 முதல் மதியம் 1மணி வரை 20ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து பக்தர்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வருதல்.பின்பு விநாயகர் வழிபாட்டு திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி அனைத்து படிகளுக்கும் தலைவாழை இலை வைத்து அதன்மேல் பச்சரிசி, தேங்காய், பழம் வைத்து மலர்களை தூவி தீபம் ஏற்றி வைத்து திருப்புகழ் பாடி ஒவ்வொரு படியாக பூஜைகள் நடத்தப்பட்டு கோயிலில் உள்ள 55 படிகளுக்கு திருப்படி பூஜை நடைபெறுகிறது.திருப்புகழை குமாரசாமி நாத தேசிகர் குழுவினரும், கரூர் மேலைபழனியப்பன் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட உள்ளது.
பின்னர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை திருப்புகழ் திருப்படி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Tags :
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது