×

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதார கேடு

கரூர், செப்.21: சாலையோர குப்பையால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. இதனை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூரில் இருந்து கோவை செல்லும் பைபாஸ் சாலையில் கோவிந்தம்பாளையம் உள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் நாளுக்கு நாள் கட்டிடங்கள் பெருகி வருகின்றன. குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இருக்கின்ற குப்பைதொட்டிகளும் நிரம்பி வழிகின்றன. பல்வேறு மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு அமலுக்கு வந்தும் மாவட்ட தலைநகரான கரூரில் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பிளாஸ்டிக் கப்கள், கேரிபேக்குகளும் மூட்டை மூட்டையாக ஒதுக்குப்புறங்களில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. எவ்வளவுதான் அகற்றினாலும் மீண்டும் மீண்டும் கோவிந்தம்பாளையம் பகுதியில் குப்பை மலைபோல குவிகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவ்வப்போது இதற்கு தீவைத்து எரிக்கின்றனர். சாலையோர குப்பைகளை அகற்றவும், சாலையோரத்தில் குப்பைக்கு தீவைப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்