பட்டய கல்வி சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி, செப். 21:  புதுச்சேரி தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் என்னும் தலைப்பில் ஓராண்டு பட்டய கல்வியை வழங்கி வருகிறது. 2013ம் ஆண்டு முதல் நடக்கும் இந்த வகுப்பின் 5ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மனநல ஆலோசனை மைய துவக்க விழா நேற்று நடந்தது. ஆலோசனை மைய ஒருங்கிணைப்பாளர் ராமபிரபு வரவேற்றார். கல்லூரி முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் கலந்து கொண்டு, 5ம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் `மனநலனை ஊக்குவிப்பதில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும், பட்டய வகுப்பின் முக்கியத்துவம், அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கி கூறினார். உளவியல் துறைத்தலைவர் பாலசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள் சங்கீதா தாஸ், பாரிவள்ளல் மற்றறும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியை ரோசலின் பிரபா நன்றி கூறினார்.

Related Stories: