வளர்ச்சி திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சின்னசேலம், செப். 21: கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமலை, மேல்சாத்தனூர், தாழ்சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரதமரின் குடியிருப்பு கட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளிமலை ஊராட்சியில் கோணக்காடு உள்ளிட்ட பகுதியில் உள்ள ஓடைகளில் தடுப்பணை நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் கல்வராயன்மலையில் வறட்சியை சமாளிக்கும் வகையில் குடிநீர் திட்ட பணிகளும் நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், திட்ட இயக்குநர் மகேந்திரன், செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் நித்யா ஆகியோர் மலையில் நடந்து வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

வெள்ளிமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோணக்காடு பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். கல்வராயன்மலை பிடிஓ துரைசாமி, உதவி பொறியாளர்கள் மாயகிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கல்வராயன்மலையில் நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுராஜா, சிவகுமார், ராமலிங்கம், பணிமேற்பார்வையாளர்கள் சக்திவேல், சீனுவாசன், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: