மணப்பாறை மருந்துக்கடையில் புகுந்து ரூ.3.5 லட்சம் கொள்ளை கேமராக்களை திருப்பிவிட்டு கைவரிசை

மணப்பாறை, செப்.19:  மணப்பாறையில் மருந்துக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.3.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.மணப்பாறையை சேர்ந்தவர் சாதிக் அலி. மதுரை ரோட்டில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதையொட்டி 7 கிளினிக்குகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று முன்தினம் சாதிக்அலி கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவிலிருந்த ரூ.3.50 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையர்கள் மேற்கூரை மற்றும் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்து கடையிலிருந்த 2 கேமராக்களை திருப்பிவிட்டு கல்லாவிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ேரகைகள் பதிவு செய்யப்பட்டது. மணப்பாறை-துவரங்குறிச்சி மெயின்ரோட்டில் சுற்றிலும் 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனைகள் உள்ள பரபரப்பான சாலையில் இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளது. மேலும் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கொள்ளிடம் டோல்கேட் டில் வீட்டின் பூட்டை உடை த்து நகை, பணம் கொள்ளை:  கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள அப்பாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(55), தனியார் கெமிக்கல் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம் தேதி ராஜேந்திரன் அவரது மனைவி மல்லிகா ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு ரங்கத்தில் உள்ள அவர்களது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததையறிந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பீரோவையும் உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு வெளிநாட்டு கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜேந்திரன் கொள்ளிடம் டோல்கேட் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ வீட்டில் தடயவியல் நிபுணர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர்.தியேட்டர் கழிவறையில் வாலிபர் மர்ம சாவு: திருச்சி உறையூரில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்றுமுன்தினம் 2ம் இரவு காட்சி முடிந்தது. பின்னர் தியேட்டர் மற்றும் கழிவறைகளை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது கழி வறையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த உறையூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் சோமரசம்பேட்டையை சேர்ந்த கீர்த்திவாசன்(25) என தெரியவந்தது. போதை பழக்கம் உள்ள அவர் , அதிகமாக போதையில் இருந்ததால் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டியில் கஞ்சா விற்றவர் கைது: திருச்சி கோட்டை ஸ்டேசன் பகுதியில் ஸ்கூட்டில் வைத்து கஞ்சா விற்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது ஸ்கூட்டியில் வைத்து கஞ்சா விற்ற ஜீவாநகர் எல்லை காளியம்மன்கோயில் தெரு வை சேர்ந்த சந்திரசேகர் என்ற அமாவாசையை (46) போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வாய்க்காலில் மணல் திருடிய 2 பேர் கைது: திருச்சி கொள்ளிடக்கரையில் உள்ள சென்னகரை கிராமம் வழியே புள்ளம்பாடி வாய்க்கால் செல்கிறது. சென்னகரை பகுதியில் நேற்று வாத்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புள்ளம்பாடி வாய்க்காலில் நேற்று மினி லாரி மூலம்  மணல் திருடிக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட போலீசார் மணல் திருட பயன்படுத்திய மினி லாரியை மடக்கி பறிமுதல் செய்தனர். மேலும் அதன் டிரைவர் குருவம்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜய் (22), மினி லாரி உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த கோபி (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

மணல் அள்ளிய 2 லாரிகள் பறிமுதல்:  முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் தாசில்தார் சுப்ரமணியன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முசிறி அடுத்த மண்பறை கிராமத்தில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை வருவாய்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால், லாரிகள் நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதையடுத்து அந்த மணல் லாரிகளை விரட்டிச் சென்று வருவாய்துறையினர் பிடித்தனர். இதையடுத்து லாரி டிரைவர்கள் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினர். பின்னர் 2 மணல் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வருவாய்துறையினர் ஆர்டிஓ மேல்நடவடிக்கை எடுக்க அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

Related Stories: