×

பெருமாள்மலை கோயிலில் புரட்டாசி உற்சவ விழா துவக்கம்

துறையூர், செப்.19:  துறையூரை அடுத்துள்ளது பெருமாள்மலை. தென் திருப்பதி என்றழைக்கப்படும் இந்த மலையில் சீதேவி பூதேவி சமேத பிரசன்னவெங்கடாஜலபதி கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தின் 5வது சனிக்கிழமைகளும் இங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும். வரும் 22ம்தேதி முதல் வார பூஜை ஆரம்பம் ஆகிறது. இந்த கோயிலுக்கு சம்மந்தப்பட்ட 7 கிராமங்களை சேர்ந்த கீழகுன்னுபட்டி, மேலகுன்னுபட்டி, புளியம்பட்டி, நல்லிம்பாளையம், முத்தையம்பாளையம், நல்லவன்னிபட்டி, பகளவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு தங்கள் முறைவாசல் எனும் மரியாதையை செலுத்துவர். இதில் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.

 இக்கோயிலில் கருப்பண்ணன்சாமி, வீரபத்திரசாமி, கருப்பண்ணசாமி  சன்னதியில் வைணவர் கோயிலில் இல்லாத விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விவசாயம் பெருக தானியங்களை மலை பாதையில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் துணிகளில் தூவிசெல்வர். தற்போது பெருமாள்மலையில் கூட்டம் அதிகமாக வருவதால் இருசக்கர வாகனங்கள் மலை மீது இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை. வேன்களிலும் அனுமதிக்கப்பட்ட நபர்களே ஏற்றவேண்டும்.  கோயில்களில் கடைகள் வைக்ககூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் அறநிலையத்துறை அறிவித்துள்ளது.  பெருமாள்மலைக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் பயணிகள் போக்குவரத்திற்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அதேபோல் இன்யூரன்ஸ் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது எனவும் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் துறையூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி