தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் திமுக ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

திருச்சி, செப். 19: தமிழகத்தில் அதிமுக அரசின் ஊழலை கண்டித்தும், ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கே.என்.நேரு பேசியதாவது: இந்த ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். பாஜவுடன் திமுக ரகசிய உறவு இருக்கிறது என தம்பித்துரை பேசி வருகிறார். அதுமாதிரி எந்த உறவும் கிடையாது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை திருச்சி விமான நிலையத்தில் தம்பிதுரை சந்தித்து பேசினார். அதற்காக ஸ்டாலினுக்கும், தம்பிதுரைக்கும் உறவு இருக்கிறது என சொல்லாமா?

திமுக பக்கம் உள்ள சிறுபான்மை மக்களை திசை திருப்பவே இப்படி பேசி வருகிறார். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக திமுக என்றும் இருக்கும். சிறுபான்மை மக்களுக்கு எதி ராக கூட்டணி அமைக்க மாட்டோம். பா.ஜவுடன் தொடர்பு படுத்தி ஒரு மாயையை ஏற் படுத்துகின்றனர். காவல்துறையை வைத்து பொய் வழக்கு போட்டு மிரட்டியே இன்றைய அரசு ஆட்சி நடத்துகிறது. காவல்துறையினரும், ஆட்சியாளர்கள் சொல்படியே செயல்படு கின்றனர். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை முதல்வராக கொண்டு வர இந்த ஆர்ப்பாட்டம் மூலம் சபதம் ஏற்போம். இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், எம்.எல்.ஏக்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, சேகரன், பரணிகுமார், மாவட்ட அவைத்தலைவர்கள் அம்பிகாபதி, தர்மலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசெல்வம், விஜயாஜெயராஜ், குடமுருட்டி சேகர், செயற்குழு உறுப்பினர்கள் செவந்தி லிங்கம், மயில், துரை.கந்தசாமி, தருமன் ராஜேந்திரன், துவாக்குடி நகர செயலாளர் காயா ம்பூ, மணப்பாறை நகர செயலாளர் மைக்கேல்ராஜ், துறையூர் முரளி, முன்னாள் கவுன்சிலர் லீலாவேலு, பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டிசேகர், காஜாமலை விஜய், பால முருகன், கண்ணன், ராம்குமார், கொட்டப்பட்டு தர்மராஜ், இளங்கோ, மோகன்தாஸ்,

இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், பாஸ்கரன், துரைராஜ், டோல்கேட் சுப்பிரமணி, கருணைராஜா, பாப்கான் துரை மற்றும் மகளிர் அணி, இளை ஞரணி, மாணவரணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: