வைரலான வீடியோ லாரிகளை மறித்து பணம் பறித்த போக்குவரத்து எஸ்.ஐ டிரான்ஸ்பர்

திருச்சி, செப். 19: திருச்சி அருகே லாரிகளை மறித்து பணம் பறித்த ரைவலான வீடியோ வால் போக்குவரத்து எஸ்ஐ அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். திருச்சி துவாக்குடி போக்குவரத்து பிரிவு போலீசில் எஸ்ஐயாக சீராளன் பணியாற்றி வருகி றார்.கடந்த சில தினங்களுக்கு முன் வாழவந்தான் கோட்டை டோல்பிளாசா அருகே பணி யிலிருந்தார்.  அப்போது அந்த வழியே சென்ற லாரிகளை மறித்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதன் அடிப்படையில் சீராளனை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி ஜியாவுல்ஹக் அதிரடியாக உத்தர விட்டார்.

Related Stories: