பெசன்ட் ரோட்டின் நடுவில் உள்ள மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படுமா?

கும்பகோணம், செப். 19:  குகும்பகோணம் பெசன்ட் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட பெருவணிக நிறுவனங்கள், 3 பள்ளிக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால் அந்த ரோட்டில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். கடந்த மகாமகத்தின்போது பெசன்ட் ரோட்டின் நடுவில் 30 மின் கம்பங்களை நட்டு மின்விளக்கை பொருத்தினர். இதனால் தினம்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதுபோன்ற நிலையால் சாலையின் நடுவில் மின் கம்பத்தை அகற்ற வேண்டுமென அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து 2016ம் ஆண்டு நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் சார்பில் தீர்மானம் வைக்கப்பட்டது. ஆனால் பல லட்ச ரூபாய் செலவில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தை அகற்றி மாற்றி அமைப்பதற்கான  ஆணை இல்லாததால்  அகற்ற முடியவில்லையென மாவட்ட நிர்வாகம் கூறியது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பெசன்ட் ரோட்டின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: