பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

பட்டுக்கோட்டை, செப். 19:  பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் இந்திய தொழில்நுட்ப கல்விக்குழும மாணவர் அமைப்பு, சில்க் சிட்டி லயன்ஸ் கிளப் மற்றும் ஜேசிஐ லிங்க்ஸ் சார்பில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, சதுரங்கம், ஓவிய போட்டிகள் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. போட்டிகளில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400 மாணவர்கள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் தேசிய ஜேசிஐ பயிற்சியாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

பின்னர் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட  கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப ஆய்வு கட்டுரை விளக்க போட்டியில் 30 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 105 மாணவர்கள் பங்கேற்று கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துவேலு தலைமை வகித்தார். மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஒரத்தநாடு  ஜேசிஐ தலைவர் கென்னடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். சில்க் சிட்டி லயன்ஸ் கிளப் செயலாளர் மோகன்தாஸ், ஜேசிஐ விங்க்ஸ் பட்டுக்கோட்டை செயலாளர் நாடிமுத்து, கல்லூரி துணை முதல்வர் அமலோற்பவசெல்வி ஆகியோர் வாழ்த்தினர். ஐஎஸ்டிஇ கல்லூரி மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜன் நன்றி கூறினார்.

Related Stories: