கூடுதல் விலையால் விவசாயி மகிழ்ச்சி தஞ்சை தெற்குவீதி எல்லையம்மன் கோயில் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் அபாயம்

தஞ்சை, செப். 19:  தஞ்சை தெற்குவீதி எல்லையம்மன் கோயில் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். தஞ்சை நகர பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி தெற்கு வீதியாகும்.இந்த வீதியில் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவனைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள் என்று ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது. இதனால் எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகவே தெற்கு வீதி இருக்கும். அதேபோல் தெற்கு வீதியில் உள்ள எல்லையம்மன் கோயில் தெருவில் அதிகளவில் நகை கடைகள், ஓட்டல்கள் உள்ளது. இந்த எல்லையம்மன் கோயில் தெரு வழியாகவே தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 3க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்ல வேண்டும். மிகவும் குறுகலான இந்த சாலையில் எல்லையம்மன் கோயில் எதிரே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சாலையின் நடுவில் நின்று கொண்டு குப்பைகளில் கிடக்கும் கழிவுகளை கால்நடைகள் சாப்பிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. காலை நேரத்தில் அவசர, அவசரமாக அலுவலகங்கள், பள்ளிகளுக்கு செல்வோர் நிலை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. சாலைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே எல்லையம்மன் கோயில் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: