ஒரத்தநாடு அருகே பஸ்சில் பயணம் செய்தபோது 5 பவுன் தாலி செயின் திருட்டு

ஒரத்தநாடு, செப். 19:   ஒரத்தநாடு அருகே பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தாலி செயினை திருடிய 3 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் லெசலிங்கப்பா. இவரது மனைவி திலகா (35). இவர் ஒக்கநாடு கீழையூருக்கு ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் அரசு பேருந்து நேற்று வந்தார். அப்போது அவரது கைப்பையில் உள்ள பர்சில் ரூ.2000 மற்றும் புதிதாக வாங்கிய வௌ்ளி கொலுசு இருந்தது. மேலும் தனது கழுத்தில் 5 பவுன் தாலிச்செயின்அணிந்திருந்தார்.

இதையடுத்து ஒக்கநாடு கீழையூர் பேருந்து நிறுத்தத்தில இறங்குபோது திலகா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை காணவில்லை. இதையடுத்து பேருந்து நிறுத்த சொல்லி பயணம் செய்த 3 பெண்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது பர்ஸ் மற்றும் தாலிச்செயினை அந்த 3 பெண்கள் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து பேருந்தில் இருந்து 3 பெண்களையும் இறக்கி பொதுமக்கள் தாக்கினர். பின்னர் ஒரத்தநாடு போலீசில் 3 பெண்களையும் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: