தமிழன் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்பதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்

தஞ்சை, செப். 19:  தமிழன் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும் என்பதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசினார்.எடப்பாடி பழனிசாமி ஊழல் தமிழக அரசை பதவி விலக கோரியும், ஊழல் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் அனைத்து கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் துரைசந்திரசேகரன் தலைமை வகித்தார். தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பழநிமாணிக்கம், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன், மாநில வர்த்தகத்துறை தலைவர் உபயதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், சட்ட திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், தஞ்சை மாநகர செயலாளர் நீலமேகம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர்கள் கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி, பாக்கியதாண்டவன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா முன்னிலை வகித்தனர்.

 திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது: 1997-98 ம் ஆண்டில் பெட்ரோல் 5.18 மில்லியன் டன், டீசல் 36  மில்லியன் டன்கள் தேவைப்பட்டன. தற்போது பெட்ரோல் 26.18 மில்லியன்  டன், டீசல் 81 மில்லியன் டன்கள் தேவைப்படுகின்றன. பெட்ரோல், டீசல்  பயன்பாடு அதிகரிக்கும்போது கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும்  வருவாயும் அதிகரிக்கும். ஐக்கிய முற்போக்கு அரசின் ஆட்சியில் 2014ம் ஆண்டில் கலால் வரி மூலம் மத்திய  அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.9.918 கோடி. இது 2017-18ம் ஆண்டில்  ரூ.2.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வளவு வருவாய் கிடைத்தாலும்  பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கலால் வரி விதிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர, உயர  விலைவாசியும் உயரும். பலமுனை வரிகளை தடுக்கவே ஜிஎஸ்டி கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால்  பெட்ரோல், டீசலை மட்டும் மத்திய அரசு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை.  

சாதாரண மக்கள் மீது வரியை திணிப்பதால் ஏழைகள் தவிக்கின்றனர். இந்த  ஆட்சி ஏழை மக்களுக்கு இல்லாமல் பணக்காரர்களுக்கான அரசாக இருக்கிறது. இதேபோல் தமிழக அரசு தூர்வாரும் பணிக்காக ரூ.4.735 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டது. ஆனால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. எனவே தூர்வாரும்  பணியில் முறைகேடு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. தமிழன் எழுச்சி  பெற்றால் என்ன நடக்கும் என்று மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.  ஊழல் நிறைந்த எடப்பாடி அரசையும் அகற்ற வேண்டும் என்றார்.காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், திக மாவட்ட தலைவர் அமர்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹமீது, செயலாளர் ஜெயனுலாவுதீன், விடுதலை சிறுத்தைகள் தஞ்சை மத்திய மாவட்ட தலைவர் சொக்காரவி, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் பாதுஷா மற்றும் பலர் பங்கேற்றனர். கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவிசெழியன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தமிழழகன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு, மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், கணேசன், அசோக்குமார், ரவிச்சந்திரன், அண்ணாதுரை, அம்பிகாபதி, தாமரைசெல்வன், கல்லணை செல்லக்கண்ணு, முருகானந்தம், குமார், சிவசங்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராசாராமன், சுந்தரஜெயபால், கவிதா, அரசாபகரன், நகர நிர்வாகிகள் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, ரவிச்நசந்திரன், ராஜேஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: