×

கடத்தி வருவதாக நினைத்து அரசு பணிக்காக மணல் ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

விராலிமலை, செப். 19:  விராலிமலை அருகே கடத்தி வருவதாக நினைத்து அரசு பணிக்காக மணல் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து தாசில்தார் சம்பவ  இடத்துக்கு வந்து சிறைபிடித்த லாரியை விடுவித்தார்.விராலிமலை அருகே கோறையாறு பகுதியில் இருந்து மணல் எடுத்து கொண்டு நேற்று மாலை கத்தலூர் வழியே ஒரு லாரி சென்றது. இதை பார்த்த பொதுமக்கள், மணல் ஏற்றி சென்ற லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விராலிமலை தாசில்தார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பின்னர் லாரியை பொதுமக்கள் விடுவித்தனர்.

இதுகுறித்து விராலிமலை தாசில்தார் பார்த்திபனிடம் கேட்டபோது, 2 மாதத்துக்கு முன் சூரியூர் கோறையாற்று பகுதியில் குவிக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த மணலை அரசு வேலைக்கு  பயன்படுத்தி கொள்ள வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று இந்த மணலை கொண்டு வந்தனர். அப்போது மணல் கடத்தி வருவதாக நினைத்து லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரியை விடுவித்து அரசு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.






Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...