×

அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தம்பிதுரை பெற்றார்

கரூர், செப். 19: அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அரவக்குறிச்சி ஒன்றியம், வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட கரும்பரப்பு, நந்தனூர், நாச்சிபாளையம்புதூர், மாதிரெட்டிபட்டி, செட்டியாகவுண்டனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு, கலெக்டர் அன்பழகன் தலைமையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை சம்பந்தமான மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

 இந்த நிகழ்ச்சியின்போது, வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 287 பணிகள் ரூ.9.58 கோடியிலும், ஈசநத்தம் ஊராட்சி பகுதியில் 288 பணிகள் ரூ.7.19 கோடியிலும், தெத்துப்பட்டி ஊராட்சியில் 166 பணிகள் ரூ.6.90 கோடியிலும், எருமார்பட்டி ஊராட்சி பகுதியில் 169 பணிகள் ரூ.3.78 கோடியிலும், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் 193 பணிகள் ரூ.5.45 கோடியிலும் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், திருஞானம், பொறியாளர் கண்ணன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா