×

கரூர் என்எஸ்கே நகர் பகுதியில் பாதாள சாக்கடை மூடியானது கல் வீசும் துர்நாற்றத்தால் சுகாதார கேடு

கரூர், செப்.19: கரூர் என்எஸ்கே நகரின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை மூடிக்கு பதிலாக கல்லை வைத்து மூடப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் வெங்கமேடு பகுதியின் என்எஸ்கே நகர் பகுதி உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, என்எஸ்கே நகரில் உள்ள ஒரு தெருவில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பாதாள சாக்கடை மூடியை திறந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்கு பிறகு, அதற்கான மூடி உடைந்த நிலையில் இருந்ததால் மூடியை போடாமல், அருகில் உள்ள பெரிய கல்லை எடுத்து பாதாள சாக்கடையில் முகப்பில் வைத்து விட்டு சென்றுவிட்டனர். தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, மூடிக்கு பதிலாக வைக்கப்பட்டுள்ள கல் உட்புறம் நோக்கி சரிந்த வண்ணம் உள்ளன.

மேலும், கல்லை வைத்து மூடியதன் காரணமாக, அவ்வப்போது, உட்புறம் செல்லும் சாக்கடையில் இருந்து துர்நாற்றம் வெளியேறுவதால் இந்த பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கல்லை அகற்றி விட்டு மூடியை வைத்து மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, அதிகாரிகள் இதில் தேவையான கவனம் செலுத்தி, கல்லை அகற்றி விட்டு சாக்கடை மூடியை வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்