×

தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி

தொண்டி, செப்.19:  தொண்டி மற்றும் தாமேதிரன்பட்டினம் அரசு பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாய்ப்பால் மற்றும் ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொண்டி மேற்கு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அகமது பாய்ஸ் துவக்கி வைத்தார். ஒவ்வொரு வீடாக சென்று தாய்ப்பாலின் மகத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறித்தும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு விளக்கினர். தாமேதிரன்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்சாமி தலைமையில் பேரணி நடைபெற்றது. உதவி ஆசிரியை சிவசங்கரி ஊட்டச்சத்து குறித்தும் உணவு பொருள்கள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துறைத்தார். மேலும் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து உணவு பொருட்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.

ரத ஊர்வலம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘தூய்மையே சேவை” ரத விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை கலெக்டர் வீரராகவ ராவ், கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ‘தூய்மையே சேவை” உறுதிமொழி எடுத்தனர். இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவ் கூறுகையில், பொதுமக்களிடையே சுற்றுப்புறச் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ரத ஊர்வலம் செல்கிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடையே திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலை உருவாக்குதல், பாலிதீன் பைகளை முற்றிலுமாக தவிர்த்தல் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாடு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமாலினி, உதவி இயக்குநர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள் உள்படபலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை