இவ்வாறு ரகுநாதன் கூறினார். நொய்யல் அணைக்கட்டில் மணல் கடத்தல்

கோவை, செப்.19: கோவை நொய்யல் ஆற்றின் துவக்கமான செம்மேடு, கூடுதுறை, முள்ளங்காடு, அம்மன் கோயில் வனப்பகுதி ஆறு, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட பகுதியில் டிராக்டர், மாட்டு வண்டி மூலமாக தினமும் மணல் கடத்தப்படுகிறது.  சாக்கு மூட்டைகளில் கட்டிவைத்து புதர் காடு வழியாக கழுதைகளை பயன்படுத்தி ரோட்டிற்கு மணல் மூட்டைகளை கொண்டு வந்து டிராக்டரில் ஏற்றி கடத்தி வருகின்றனர். சித்திரை சாவடி அணைக்கட்டு பகுதியில் 10 அடி உயரத்திற்கு மணல் தேக்கம் இருந்தது. கடந்த சில மாதத்தில் 8 அடி வரையில் இருந்த மணல் தேக்கம் காணாமல் போய்விட்டது. மணலை இரவு நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் கடத்தி வருகின்றனர்.

 போளுவாம்பட்டி, ஆலாந்துறை, செம்மேடு உள்ளிட்ட பகுதியில் ஒரு டிராக்டர் கடத்தல் மணல் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இரவு பகலாக மணல் கடத்தல் நடந்தாலும் போலீசாரும், கனிமவளத்துறையினரும், வருவாய்த்துறையினரும் கண்டுகொள்வதில்லை.  ஆலாந்துறை, பேரூர், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.  கனிம வளத்துறையினர் மணல் கடத்தலை தடுக்காமல் வருவாய்த்துறையினர் பார்த்து கொள்வார்கள் என கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். பொதுப்பணித்துறையினர் கட்டுபாட்டில் ஆறு, தடுப்பணைகள் இருக்கிறது. ஆனால் கடத்தலை தடுக்க பொதுப்பணித்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை.

மணல் கடத்தலுக்கு வசதியாக ஆற்றில் பல இடங்களில் கரைகள் சேதப்படுத்தப்பட்டு வண்டி பாதை அமைக்கப்பட்டுள்ளது. முண்டந்துறை பள்ளத்து ஓடை, ெகாம்பு தூக்கி அம்மன் கோயில் ஓடை, சாடிவயல் ஓடைகளிலும் மணல் கடத்தல் நடக்கிறது. மணல் கடத்தலை தடுக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமூல் வசூலில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Related Stories: