டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததால் போராட்டம் நடத்த மா.கம்யூ., முடிவு

அவிநாசி, செப். 19: திருப்பூர் வேலம்பாளையம் மா.கம்யூ. நகர குழுக் கூட்டம் நேற்று நடந்தது.  இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், ரங்கராஜ், நகரச் செயலாளர் சுப்பிரமணியம் உள்பட நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருப்பூர் 14வது வார்டு அமர்ஜோதி கார்டன் அருகே சிறுபூலுவபட்டி சாலையில் மேல்நிலைப் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்புகள், தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. இப்பகுதி வாகன போக்குவரத்து நிறைந்தவை.   இந்த நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதி அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைக்கண்டித்து பெண்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இக்கடை அதே இடத்தில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அரசியல் கட்சிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்பட அனைத்து பொது நல அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: