பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க கலெக்டர் அறிவுரை

திருப்பூர், செப். 19: திருப்பூரில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், அவர் பேசுகையில்,`பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கிறது. மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், மலட்டுத்தன்மை, ஹார்மோன் சுரப்பில் சமச்சீர் இன்மை உள்பட பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது. நாம் அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்’என்றார்.

இதைத்தொடர்ந்து, கனரா வங்கி வாடிக்கையாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கனரா வங்கியில் அரசு மானிய கடன்களை தவணை தவறாமல் திருப்பி செலுத்திய 120 வாடிக்கையாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட  வருவாய் அலுவலர்  பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி, அனைத்து அரசு அலுவலர்கள்  மற்றும் வங்கியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: