×

தெங்குமரஹாடாவில் புலிக்கு விஷம் வைத்து கொன்றவருக்கு சிறை

ஊட்டி, செப். 19: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெங்குமரஹாடாவில் புலிக்கு  விஷம் வைத்து கொன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனங்களில் புலி,  யானை, உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.  இது பாதுகாக்கப்பட்ட வனம் என்பதால், வன குற்றங்களை தவிர்க்கும் வகையில்,  வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதுமலை புலிகள் காப்பகம், சீகூர்  வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமரஹடா பகுதியில், கடந்த 2014ம் ஆண்டு இறந்த  எருமை மீது விஷம் வைத்து, பெண் புலியை கொன்றது தொடர்பாக வழக்கு பதிவு  செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தெங்குமரஹாடா சித்தரம்பட்டி கிராமத்தை சேர்ந்த  திம்மையன்(60) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கோத்தகிரி  நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான  தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. புலியை விஷம் வைத்ததை திம்மையன் ஒப்புக்  கொண்டதால் அவருக்கு மூன்று ஆண்டு சிறை  தண்டனையும், ரூ.10,500 அபராதம் விதித்து, நீதித்துறை நடுவர் தர் தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED தாவரவியல் பூங்கா – படகு இல்லம் இடையே பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கம்