×

சாலைகளை சீரமைக்க ஓட்டுநர்கள் கோரிக்கை

ஊட்டி, செப். 19: ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா, பைக்காரா மற்றும் அவலாஞ்சி செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி சுற்றுலா கார் சுமோ மேக்சிகேப் ஓட்டுநர் நலச்சங்க தலைவர் கோவர்தன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

 வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  குறிப்பாக, ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல், பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலையும் மிகடும் பழுதடைந்துள்ளது.இச்சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பழுதடைந்த இச்சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறது.

மேலும், ஊட்டியில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையும் பழுதடைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  கடந்த மூன்று ஆண்டுகளில் பல முறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இச்சாலையை சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோவர்தன் கூறியுள்ளார்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்