சொத்துவரியை உயர்த்த மாநகராட்சி நடவடிக்கை

கோவை, செப்.19: சொத்துவரியை உயர்த்தும் நடவடிக்கைைய கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையை வரும் நவம்பர் 24ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  கோவை மாநகராட்சியில் 4.98 லட்சம் சொத்துவரி விதிப்பு இனங்கள் உள்ளது. மாநகராட்சியின் சார்பில் பரப்பளவுக்கு ஏற்ப குடியிருப்புகளுக்கு, குடியிருப்புகள் அல்லாத அனைத்து வகை வணிகவளாக கட்டடங்களுக்கு சொத்துவரியும் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தமிழகஅரசால் குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், வாடகை குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்படும் என கடந்த இருமாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

 கோவை மாநகராட்சி சார்பில் கடந்த நவம்பரில் சொத்து அளவீடு என்ற பெயரில் வரிவிதிப்பு, குப்பை வரி, சொத்து பெயர் மாற்றத்திற்கு கட்டணம் வசூலித்தல், குடிநீர் வைப்புத்தொகை உயர்வு போன்றவை வரிசீராய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், சொத்துவரி உயர்த்தப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் தற்போது முழுவீச்சில் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியினர் சீராய்வு செய்யவுள்ள இந்த சொத்துவரி சொத்து உரிமையாளர் அல்லது குடியிருப்போர் அல்லது குத்தகைதாரர்கள் சமர்ப்பிக்கும் சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையில் உள்ள விபரங்களை அடிப்படையாக கொண்டு இருக்கும்.  

 எனவே, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துகளின் உரிமையாளர்கள், குடியிருப்போர், குத்தகைதாரர்கள் சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையினை வரும் நவம்பர் 28ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மாநகராட்சியால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், சொத்துவரி சுய மதிப்பீட்டு விபர அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விபரங்களின் ஏதேனும் வேறுபாடுகள் காணப்பட்டால், சொத்து உரிமையாளர்களின் கட்டட பரப்பளவு, கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு, உபயோகம் போன்றவை குறித்த ஆட்சேபனைகள் பெறப்பட்டு, அதனடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்ட காலத்தில் இருந்து மறுமதிப்பீடு செய்யப்பட்டு சொத்துவரி கேட்பு முடிவு செய்யப்படும் எனவும் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: