×

இலவச வீட்டுமனை கேட்டு முன்னாள் ராணுவவீரர்கள் 10,000 பேர் மனு

மதுரை, செப்.19: பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டுமனை இடம் கொடுப்பதாக பரவலாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் திங்கள் கிழமையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் வாரிசுகள் நேரில் வந்து இலவச வீட்டு மனை கேட்டு மனு கொடுத்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவவீரர்கள் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்களின் மண்டல அலுவலகம் மதுரையில் உள்ளதால், மதுரையில் கொண்டு வந்து மனு கொடுக்க வேண்டும் என கருதி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை என தென் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவவீரர்கள் ஊரில் இருந்து பலநூறு ரூபாய் செலவு செய்து, நேரில் வந்து மனு கொடுத்து செல்கின்றனர்.
இந்த மனுவை பெற்றுவரும் வருவாய்த்துறையினர், இப்படி வாரம்தோறும் ஆயிரக்கணக்கில் மனு குவிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த மனுக்களுக்கு முறையான ரசீது மட்டும் கொடுத்து மனுக்களை வாங்கி கொண்டு முன்னாள் ராணுவவீரர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.



Tags :
× RELATED அழகர்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்