திருமண ஆசை காட்டி 2 பெண்கள் பலாத்காரம்

மதுரை/வாடிப்பட்டி, செப்.19: திருமண ஆசை காட்டி 2 பெண்களை சீரழித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.நாகமலை புதுக்கோட்டை அருகேயுள்ள கிழாநேரியை சேர்ந்தவர் திரவியம் மகன் ஈஸ்வரன்(29). மதுரையில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்தக்கார பெண் கவிதா(19, பெயர்மாற்றப்பட்டுள்ளது). கல்லூரி படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி கவிதாவுடன் ஈஸ்வரன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இது குறித்து கவிதா சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குபதிவு செய்த போலீசார் ஈஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதேபோல் மதுரை அனுப்பானடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் தேவி (19, பெயர்மாற்றறப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவன ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் மரக்கடையில் வேலை பார்க்கும் அய்யர்பங்களாவை சேர்ந்த ஹரிமுருகன் (28) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. ஹரிமுருகன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தேவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் தேவி புகார் செய்தார். ஹரிமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு அவரை தேடி வருகின்றனர்

Advertising
Advertising

Related Stories: