குடிநீர் விநியோக பணியிலிருந்து ‘நழுவ துவங்கும்’ உள்ளாட்சிகள்

திண்டுக்கல், செப். 19: பொதுமக்களுக்கான தண்ணீர் விநியோகப்பணி உள்ளாட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து தனியார்மயத்திற்கு வெகுவாய் மாறி உள்ளது. வாகன குடிநீர்க்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால் நோய் ஏற்படுவதுடன், கூடுதல் செலவினத்தையும் பொதுமக்கள் சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.கைவிட்ட பருவமழைசில ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ளாட்சி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இதற்காக நீராதார திட்டங்களை உருவாக்குதல், நீர் பெறுதல், தேக்குதல், விநியோகத்தல் என்று பல்வேறு கட்ட செயல்பாடுகள் இருக்கும். மேலும் மாற்று ஏற்பாடாக குடியிருப்பு பகுதிகளிலே ஆழ்துளை அமைத்த பிளாஸ்டிக் தொட்டிகளில் நீரேற்றி அவ்வப்போது நீர் விநியோகிக்கப்படும். ஆனால் சில ஆண்டுகளாக பருவமழை பெய்த்ததால் நீராதாரங்கள் வற்றின. மேலும் நிலத்தடிநீரும் குறைந்து விட்டது. இதனால் உள்ளாட்சிகள் மூலமான குடிநீர் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சியும், ஊழலும்ஆழ்குழாய்கள் அடிகுழாய்களாக இருந்த வரை பாதிப்பில்லாத நிலையில் இருந்தது. ஆனால் மோட்டார் பொருத்தி தரைமட்டத் தொட்டியில் தேக்கி விநியோகிப்பதில் பரவலாக முறைகேடுகள் ஏற்பட்டன. மோட்டார் வாங்கியதில் ஊழல் போன்றவற்றால் குறிப்பிட்ட ஆண்டிற்கு முன்பே பழுதாக துவங்கின. இதனை சரி செய்வதாக கழற்றி எடுத்து சென்ற உள்ளாட்சிகள் பின்பு பொருத்தவே இல்லை. இதனால் நீர் இருந்து பல ஆழ்குழாய்கள் பயனின்றிக் கிடக்கிறது. குடிநீர் தட்டுப்பாட்டிற்கு மழையின்மை காரணமாக இருந்தாலும் அதிகரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஊழலால் இந்த தட்டுப்பாடு கடுமையாகத் துவங்கியது. ஆனால் பருவமழை பொய்த்து விட்டது என்று பொதுவான காரணத்தை பரப்பத் துவங்கினர்.

Advertising
Advertising

தனியாருக்கு கைமாறிய கதை: ஒரு கட்டத்தில் குடிநீர்க்காக உள்ளாட்சிகளை எதிர்பார்க்கும் மனோநிலை மக்களிடம் மாறிப்போனது. இதை உணர்ந்து குடிநீர் வாகனங்கள் அதிகளவில் பெருக துவங்கின.

புறநகர் கிணறுகள், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீரை உறிஞ்சி தேவைப்படும் பகுதிகளுக்கு இந்நீரை விற்பனை செய்தனர். வறட்சியில் பரிதவித்த பொதுமக்களின் தாகம் தணியவே இந்த வாகனங்களையே தற்போது வரை முழுமையாக சார்ந்து வாழ துவங்கி உள்ளனர்.டிராக்டர், லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்களில் இந்த நீர் வீடுகளுக்கு வந்து சேர்கிறது. இதனால் பொதுமக்களின் அடிப்படைத் தேவையான நீரை வழங்கும் பொறுப்பு உள்ளாட்சி என்ற நிலையில் இருந்து தனியாரின் கைக்கு மாறிவிட்டது. இந்த வகையில் பொதுமக்களுக்கும் செலவினங்கள் அதிகரித்து விட்டது. அதேவேளையில் தனியார் தண்ணீர் வாகனங்கள் இல்லாமல் இருந்தால் உள்ளாட்சி ஏக நெருக்கடியைச் சந்தித்திருக்கும்.சுகாதாரப்பார்வை கேள்விக்குறி-மேலும் இந்த நீர் எவ்வித பரிசோதனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தாமல் பொதுமக்களுக்கு நேரடியாகச் சென்றடைவது சுகாதாரப்பார்வையில் கேள்விக்குறியை எழுப்பி உள்ளது.பராமரிப்பில்லாத, சுகாதாரமற்ற கிணறு, நிலத்தடிநீர் பாதித்த பகுதிகள் போன்றவற்றில் இருந்து நீர் எடுத்து வருவதால் இதனை பருகுபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முடிஉதிர்தல், காய்ச்சல், தோல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.உரிய திட்டங்கயே ஒரே வழிஎனவே இயற்கையான முறையில் நீரைத்தேக்கவும், சேமிக்கவும் உள்ளாட்சிகள் உரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மழைநீர் விரயத்தை தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்த வேண்டும். மேலும் இதுபோன்ற வாகன தண்ணீர் விற்பனையையும் கட்டுப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்த வேண்

டும்.அப்போதுதான் பொதுமக்கள் தாகம் தணிவதுடன், பாதுகாப்பான குடிநீர் சப்ளையையும் உறுதி செய்து கொள்ள முடியும் என்று சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: