பிரம்மோற்சவ விழாவுக்காக திருப்பதி சென்றது 600 கிலோ பூக்கள்

திண்டுக்கல், செப். 19: பிரம்மோற்சவ விழாவுக்காக திருப்பதி கோயிலுக்கு 600 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி துவங்கியது.இதற்கான பல்வேறு பகுதிகளில் இருந்து கோயிலுக்கு பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம்.இதன்படி திண்டுக்கல்லில் இருந்து பழநி புஷ்ப கைங்கர்ய சபா மூலம் நேற்று 600 கிலோ பூக்கள் அனுப்பப்பட்டன. செண்டுமல்லி, வாடாமல்லி, விரிச்சிப்பூ, செவ்வந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பேக் செய்யப்பட்டு லாரியில் அனுப்பப்பட்டன. இந்த ஒரு வாரத்தில் இதுபோன்று 20 டன் பூக்கள் திருப்பதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: