திமுக செயற்குழு கூட்டம்

ஒட்டன்சத்திரம், செப். 19: ஒட்டன்சத்திரம் நகர திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகிக்க,. மாவட்ட அவைத்தலைவர் மோகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் பணிகளில் துரிதமாக செயல்பட வேண்டும். நகராட்சியின் புதிய வரியை ரத்து செய்து பழைய வரியை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், வார்டு செயலாளர்கள் நாட்ராயன், ஆனந்தன், கருப்பாத்தாள், சின்னச்சாமி, வீரா.கணேசன், வேலுச்சாமி, தீபக் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: