ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியரின் மருத்துவ நலநிதி ரூ.4 லட்சமாக உயர்வு

திண்டுக்கல், செப். 19: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் மருத்துவ நலநிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கருவூலக் கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மாநிலப்பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கருவூலக் கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் கலந்து கொண்டு பேசியதாவது: ‘‘80 வயது நிறைவடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியத்திற்கு வயது குறித்து அடையாள ஆவணமாக ஆதார் அட்டையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று 26.5.17ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பெற்று வரும் மருத்துவ நலநிதி கடந்த ஜூனில் முடிவடைந்த நிலையில் ஜூலை முதல் இந்நிதி நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு நோய்களுக்கு கூடுதலாக ரூ.3.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்.ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் சுமார் 79ஆயிரம் பேர் பொதுத்துறை வங்கியில் ஓய்வூதியம் பெற்று வந்ததை கருவூலம் மூலம் பெற்ற கொள்ளலாம் என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாழ்நாள் நிலுவை மற்றும் ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்குவதற்கான நிதிஅதிகார உச்சவரம்பு கருவூல அலுவலர்க்கு 1.5 லட்சத்தில் இருந்து ரூ.5லட்சமாகவும், கருவூலக் கணக்கத்துறை ஆணையர் ரூ.3லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலும் அதற்கு மேல் அரசிடமிருந்து அனுமதி பெற்று வழங்கலாம்.ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வருடாந்திர நேர்காணலுக்கு வர முடியாதவர்களுக்கு ஜீவன் பிரம்மான் திட்டம் மூலம் வாழ்வுரிமை சான்று வழங்கலாம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட கருவூல அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: