விசைப்படகு மீனவர்கள் 8வது நாளாக ஸ்டிரைக்

புதுச்சேரி, செப். 19:    புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 200 விசைப்படகுகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். முகத்துவாரம் சரிவர தூர்வாராததால் மணல் சேர்ந்து அவ்வப்போது படகுகள் தரைதட்டி சேதமாகி வருகின்றன. இதனால் முகத்துவார பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காணவும், தொடர்ந்து தூர்வாரவும் கோரி விசைப்படகு மீனவர்கள் கடந்த 11ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அன்று மரப்பாலம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், அடுத்த நாள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அரசு தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால் மீனவர்களின் ஸ்டிரைக் நேற்று 8வது நாளாக நீடித்தது. இதனால் பல கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விசைப்படகு உரிமையாளர்களுடன் முதல்வர் நாராயணசாமி, மீன்வளம் மற்றும் துறைமுகத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் தீர்வு காணப்படாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: