தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி, செப். 19:  மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தினுள் கடந்த 15ம் தேதி தொடங்கி வரும் 2ம் தேதி வரை தூய்மையே சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உதவியாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக நேற்று, ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுக்கு எதிரே விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் புனித பேட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் சங்கர்ராவ் படே பேரணியை துவக்கி வைத்தார். துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர்கள் அனிதா ருஸ்தகி, பெட்சி மத்தாய், துணை மருத்துவ கண்காணிப்பாளர் அம்ரோஸ் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் சுத்தம், சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பேரணியானது மருத்துவமனை வளாகத்தின் வழியாக சென்று ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் முடிவடைந்தது.

Related Stories: